
நடிகை ஆன நடன கலைஞர்
கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகும் இந்த புராண படத்தில் மோகன்லால், பிரபாஸ் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். கண்ணப்ப நாயனாராக விஷ்ணு மஞ்சு நடிக்கிறார். சரத்குமார், ஐஸ்வர்யா பாஸ்கரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் பிரீத்தி முகுந்தன் நடன கலைஞராகவே நடிக்கிறார்.
இதுகுறித்து இயக்குனர் முகேஷ் குமார் கூறும்போது “கண்ணப்பா" படத்தில் ப்ரீத்தி நடிக்கும் முக்கிய கதாபாத்திரத்திற்கான நடிகர்கள் தேர்வு செயல்முறை கடுமையானதாக இருந்தது. விஷ்ணு மஞ்சு, மோகன்லால் மற்றும் பிரபாஸ் உள்ளிட்ட இந்திய சினிமாவின் உச்ச நடிகர்களுடன் ப்ரீத்தி இணைந்து நடிப்பது, அவரது திரைப்பயணத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
ப்ரீத்தி பரதநாட்டிய நடனக் கலைஞர் என்பதால், "கண்ணப்பா"வில் அவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது. படத்தில் இடம்பெறும் பெரிய அளவிலான சண்டைக்காட்சிகளுடன் அவரது நடனக் காட்சிகளும் பார்வையாளர்களுக்கு காட்சி விருந்தாக இருக்கும், ப்ரீத்திக்கு இந்த வாய்ப்பு திரையுலகில் குறிப்பிடத்தக்கது மட்டும் அல்ல, கலை, சினிமா மற்றும் பெரும்பாலும் கற்றல் உலகிற்கு ஒரு பாய்ச்சல். அவர் இந்த பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருந்தார், அவருடன் பணியாற்ற நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!