
மிஸ்டர் சந்திரமவுலி புகழ் நடிகர் சங்கரன் காலமானார்
மவுனராகம் படத்தில் ரேவதியின் தந்தையாக சந்திரமவுலி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் "மிஸ்டர் சந்திரமவுலி" என அவரை அப்படத்தின் நடிகர் கார்த்திக் அழைக்கும் காட்சி திரைப்பட ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் சங்கரனை பிரபலமாக்கியது. 1999க்கு பின் எந்த படங்களிலும் அவர் நடிக்கவில்லை. இந்த நிலையில் 91 வயதாகும் ரா.சங்கரன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!