
‛லால் சலாம் : ரஜினி பிறந்தநாளில் வெளியான அடுத்த சர்ப்ரைஸ்
தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ‛லால் சலாம்" படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். கிரிக்கெட்டை தழுவி உருவாகி உள்ள இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற வேடத்தில் ரஜினி நடித்துள்ளார்.
பொங்கலுக்கு படம் திரைக்கு வர உள்ள நிலையில் இன்று ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு மொய்தீன் பாய் ரஜினியின் முன்னோட்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் ரஜினி எதிரிகளை அடித்து பறக்க விடுவது, தொழுகை செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பின்னணியில் ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் ‛ஜலாலி ஜலாலி..." என்ற பாட்டும் ஒலிக்கிறது.
ஒரேநாளில் ரஜினியின் இரு படங்களின் அப்டேட் வெளியாகி உள்ளது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.
லால் சலாம் முன்னோட்ட வீடியோ லிங்க் : https://www.youtube.com/watch?v=vL15-DjhDsw


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!