
மூத்த நடனக் கலைஞர்களை கவுரவிக்கும் “டான்ஸ் டான்” விழா
"டான்ஸ் டான் குரு ஸ்டெப்ஸ் 2023 கோலிவுட் விருதுகள்" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மூத்த நடன கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட இருக்கிறது. சென்னை காமராஜர் அரங்கில் வரும் 30ம் தேதி மாலை 3 மணியளவில் டான்ஸ் மாஸ்டரும், நடிகரும், இயக்குனருமான ஸ்ரீதர் தலைமையில் நடக்கிறது.
இதுகுறித்து ஸ்ரீதர் கூறியதாவது: தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்து நடனத்தை பயிற்றுவித்த நடனக்கலைஞர்கள் பற்றிய விவரங்கள் வரலாற்றில் இல்லை. 1950களில் தொடங்கி 2023 வரையிலும் பல புகழ்பெற்ற நடனக்கலைஞர்கள் பணியாற்றி இருக்கின்றனர். அந்த நடனக்கலைஞர்கள் பற்றி பதிவு செய்து, அவர்களின் சாதனைகளை நினைவுகூர்ந்து, இந்த விழாவில் கவுரவிக்கப்படுகின்றனர். இது தவிர பிரமாண்டமான கலை நிகழ்ச்சிகளும் குறிப்பாக நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்பட இருக்கிறது. என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!