
அமீர்கான், விஷ்ணு விஷாலுக்கு உதவிய அஜித்
சென்னையில் பெய்த பெருமழையால் தான் வெள்ளத்தில் சிக்கி இருப்பதாக போட்டோ வெளியிட்டார் விஷ்ணு விஷால். அவரை மீட்பு படையினர் படகு மூலம் மீட்டனர். விஷ்ணு விஷால், அவரது மனைவி ஜுவாலா கட்டா மற்றும் நடிகர் அமீர் கான் உள்ளிட்டவர்களும் மீட்கப்பட்டனர். இதற்காக நன்றி தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.
இந்நிலையில் மற்றொரு பதிவில் அஜித் குமார் உடன் அமீர்கான், விஷ்ணு விஷால் இருக்கும் போட்டோ வைரலாகியது. இதுபற்றி விஷ்ணு விஷால் வெளியிட்ட பதிவில், ‛‛நாங்கள் இருந்த நிலையை அறிந்து எங்களுக்கு பொதுவான நண்பர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்ட நடிகர் அஜித், எங்கள் வில்லாவை சேர்ந்த 30 பேருக்கும் பயண வசதியை ஏற்படுத்தி தந்தார். எப்போதும் உதவும் தன்மையை கொண்டவர் அவர். லவ் யூ அஜித் சார் என குறிப்பிட்டார்.
அஜித்துடன் அமீர்கான், விஷால் விஷால் தவிர்த்து விஷ்ணு விஷாலின் மனைவி ஜூவலா கட்டா உள்ளிட்டோர் இருக்கும் போட்டோவும் வைரலாகின.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!