
விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் மீண்டும் இணைந்த நயன்தாரா
இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ள இந்த படத்திற்கு ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" என்பதை சுருக்கி ‛எல்ஐசி" என்று டைட்டில் வைக்க முடிவு செய்துள்ளார் விக்னேஷ் சிவன். மேலும், பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை ஒருவரிடத்தில் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படும் நிலையில், எஸ். ஜே. சூர்யா, மிஷ்கின் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது நயன்தாராவும் இந்த படத்தில் இணைந்திருக்கிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் அக்கா வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, நானும் ரவுடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல் என விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்துள்ள நயன்தாரா மூன்றாவது முறையாக இப்படத்தில் நடிக்கப் போகிறார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!