அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அப்டேட் இதோ
டிச 01, 2023
Advertisement
கடந்த 2018ல் ரவிகுமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தொடங்கிய படம் "அயலான்". ரகுல் ப்ரீத் சிங் , இஷா கோபிகார், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இது தமிழில் உருவாகும் ஏலியன் படம் என்பதால் இதன் மேல் ஆரம்ப கால கட்டத்தில் இருந்து பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
இத்திரைப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகிறது. அதனால் இதன் இசை வெளியீட்டு விழாவை வருகின்ற டிசம்பர் 26ந் தேதி சென்னையில் நடத்த படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகிறது. அதனால் இதன் இசை வெளியீட்டு விழாவை வருகின்ற டிசம்பர் 26ந் தேதி சென்னையில் நடத்த படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!