விழா இல்லாமல் வெளியான சலார் டிரைலர்
டிச 01, 2023
Advertisement
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து கடந்த வருடம் வெளிவந்த கன்னடப் படம் "கேஜிஎப் 2". இப்படத்தின் டிரைலர் வெளியீட்டை கடந்த வருடம் மார்ச் மாதம் பெங்களூருவில் விமரிசையாக நடத்தினார்கள். தென்னிந்திய அளவில் உள்ள பத்திரிகையாளர்கள், மும்பை பத்திரிகையாளர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி அவர்கள் முன் டிரைலர் வெளியீடு நடைபெற்றது. பான் இந்தியா படமாக ஏப்ரல் மாதம் வெளியான படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் நடித்து இந்த மாதம் வெளியாக உள்ள "சலார்" படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது. ஆனால், இந்தப் படத்திற்காக எந்த ஒரு விழாவையும் தயாரிப்பு நிறுவனம் நடத்தவில்லை. "கேஜிஎப் 2" படத்திற்காக அப்படி ஒரு விழாவைக் கொண்டாடிய குழுவினர் இந்த "சலார்" படத்தின் டிரைலர் வெளியீட்டை நேரடியாக யு டியூப் தளத்தில் வெளியிடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் படம் வெளியாவதற்கு முன்பாக படக்குழுவினர் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து படத்தை புரமோஷன் செய்வார்கள் எனத் தெரிகிறது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!