
சிம்பு 48வது படம் : தேசிங்கு பெரியசாமியை வாழ்த்திய ரஜினி
இந்த நிலையில் அதே கதையை சிம்புவிற்கு சொல்லி ஓகே பண்ணிவிட்டார் தேசிங்கு பெரியசாமி. சிம்புவின் 48வது படமாக உருவாகும் அப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. 100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் அந்த படத்திற்காக தற்போது தனது உடல் கட்டை தயார்படுத்தி வருகிறார் சிம்பு.
இந்த நிலையில் தேசிங்கு பெரியசாமி அளித்த ஒரு பேட்டியில், எனது அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக ரஜினி இடத்தில் நான் கூறிய போது, எனக்கு வாழ்த்து தெரிவித்தவர், நல்லா சூப்பரா பண்ணுங்க என்று தெரிவித்தார் என கூறியிருக்கும் தேசிங்கு பெரியசாமி, சிம்புவும் இந்த படத்தில் நடிப்பதில் மிக ஆர்வமாக இருக்கிறார். பல மாதங்களாக சில பயிற்சிகளை பெற்று தனது பாடி லாங்குவேஜை பக்காவாக மாற்றியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது என்று தெரிவித்திருக்கிறார் தேசிங்கு பெரியசாமி.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!