
இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது : ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சீறிய சமுத்திரக்கனி
அதில், ‛‛பிரதர் இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது. நீங்க செய்ய வேண்டியதெல்லாம் எந்த பொதுவெளியில் நின்று எகத்தாளமாக அருவருப்பான உடல் மொழியால் சேற்றை வாரி இறைத்தீர்களோ, அதே பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். நீங்கள் கொடுத்த அந்த கேவலமான தரங்கெட்ட இன்டர்வியூவை சமூக வலைதளங்களில் இருந்து தொடச்சி தூர எரியனும்.
அன்னைக்கு கொடுக்காமல் ஏமாத்திட்டு போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பி கொடுக்க வேண்டியது இருக்கு. அப்புறம் பருத்திவீரன் திரைப்படத்திலும் வேலை பார்த்த நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம் அங்கெல்லாம் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்து வேலை பார்த்தவங்க. நீங்கதான் அம்பானி பேமிலியாச்சே. காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதி""
என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் சமுத்திரக்கனி.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!