
ஹாலிவுட் பாணியில் உருவாகும் பைட் கிளப்
அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கியுள்ளார். விஜய்குமார் ஜோடியாக மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் கார்த்திகேயன், சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன், சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.
சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு விக்கி மற்றும் அம்ரீன் - அபுபக்கர் ஆகியோர் இணைந்து ஆக்ஷன் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். ஹாலிவுட்டில் வெளிவரும் ஸ்ட்ரீட் பைட் பாணியிலான படம் என்கிறார்கள். படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!