
60 கோடி பஞ்சாயத்தில் நிற்கும் துருவ நட்சத்திரம்
விரைவில் படத்தை வெளியிட முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என கவுதம் ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருந்தார். அந்த "விரைவில்" என்பதற்கான காலக்கெடு என்று எதையும் சொல்லாமல் தவிர்த்துவிட்டார். அது அடுத்த வாரமாவது இருக்கலாம், அல்லது அதற்குப் பிறகாவது இருக்கலாம்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற "எமகாதகன்" பட விழாவில் பேசிய தயாரிப்பாளரும், வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவருமான கே ராஜன், "துருவ நட்சத்திரம்" படம் பற்றிப் பேசினார். அப்படத்திற்காக 60 கோடி ரூபாய்க்கு திரைப்பட கூட்டமைப்பில் புகார் உள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும், கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த "எனை நோக்கி பாயும் தோட்டா" படத்திற்காக 25 கோடி வரை கடன் கொடுத்து படம் வெளியாகக் காரணமாக இருந்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். ஆனால், அந்தப் பணத்தை கவுதம் இன்னமும் திருப்பித் தரவில்லை என்றும் கூறினார்.
60 கோடி ரூபாய் பஞ்சாயத்து முடிந்தால்தான் படம் திரைக்கு வருமா அல்லது நீதிமன்ற வழக்கு முடிந்தால் படம் திரைக்கு வருமா என்பது போகப் போகத்தான் தெரியும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!