
ஊழலுக்கு எதிராக நிஜ வாழ்க்கையிலும் நிற்க முன்வர வேண்டும் : விஷால்
இந்த நிலையில் புகார் கொடுத்த விஷாலை நேற்று மும்பை சிபிஐ அதிகாரிகள் அழைத்திருந்தனர். அதன்படி சிபிஐ முன் ஆஜரான விஷால், அவர்களிடம் தன் தரப்பு விளக்கத்தையும், தான் வைத்திருந்த ஆதாரங்களையும் வழங்கினார். விஷாலின் மானேஜ் ஹரி கிருஷ்ணனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதுபற்றி விஷால் வெளியிட்ட பதிவில், ‛‛சிபிஐ வழக்கு தொடர்பான விசாரணைக்காக மும்பையில் ஆஜரானேன். இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. விசாரணை நடத்தப்படும் விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. சிபிஐ அலுவலகம் எப்படி இருக்கும் என்பது குறித்தும் அறிந்து கொண்டேன். இந்த அலுவலகத்திற்கு செல்வேன் என்று என் வாழ்நாளில் நான் நினைத்ததில்லை. ரீல் வாழ்க்கையில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஊழலுக்கு எதிராக நிற்க முன்வர வேண்டும்,"" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!