
எம்.எஸ்.பாஸ்கரை இயக்க ஆசைப்படும் லோகேஷ் கனகராஜ்!
அப்போது அவர் பேசுகையில், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கரை என் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்பது எனது மிகப்பெரிய ஆசையாகும். அந்த ஆசை சீக்கிரமே நிறைவேறும் என்று நினைக்கிறேன் என பேசினார். அதையடுத்து எம்.எஸ்.பாஸ்கர் பேசும்போது, நீங்கள் விஜய்யை வைத்து இரண்டு படங்களை இயக்கி உள்ளீர்கள். என்னைவிட வயதில் சிறியவராக இருந்தாலும் குறுகிய காலத்தில் பெரிய அளவில் புகழடைந்து விட்டீர்கள். இன்னும் பெரிய உயரத்துக்கு செல்வீர்கள். உங்கள் படத்தில் நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னால் உடனே ஓடி வந்து நடிக்கிறேன் என்று பேசினார் எம்.ஸ்.பாஸ்கர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!