
உண்மையை பேசுங்க : சீனு ராமசாமிக்கு மனிஷா பதிலடி
இதற்கு சீனுராமசாமி, ஒரு குப்பை கதை பட இசை வெளியீட்டு விழாவில் மனிஷா தனக்கு நன்றி தெரிவித்த வீடியோவை பகிர்ந்தார். அதோடு, “நான் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருந்தால் பின் எதற்காக எனக்கு நன்றி சொன்னார். 10 ஆண்டுகள் சினிமாவில் நடித்துவிட்டு தான் அவர் போயிருக்கிறார். மீண்டும் வாய்ப்பு இருந்தால் என் படத்தில் அவர் நடிப்பார்” என்றார்.
இதற்கு மனிஷா, ‛‛ஒரு குப்பை கதை பட இசை வெளியீட்டு விழாவில் மேடையில் இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது போல் தான் சீனு ராமசாமிக்கும் நன்றி சொன்னேன். 9 ஆண்டுகளுக்கு முன் அவர் பற்றி கூறிய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. என்னிடம் அநாகரிகமாக நடந்த ஒருவருடன் மீண்டும் பணியாற்ற என்ன தேவை இருக்கிறது. சீனு ராமசாமி உண்மையை பேச வேண்டும்"" என தெரிவித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!