
குட் நைட் பட நாயகி மீதா ரகுநாத்துக்கு டும் டும்
நவ 24, 2023
Advertisement
முதல் நீ முடிவும் நீ என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் மீதா ரகுநாத். அதையடுத்து மணிகண்டனுக்கு ஜோடியாக குட் நைட் என்ற படத்தில் நடித்தார். விநாயக் சந்திரசேகரன் இயக்கிய அந்த படம் கடந்த மே மாதத்தில் திரைக்கு வந்து வெற்றி பெற்றது. அதன்பின் வேறு படங்களில் கமிட் ஆகாத மீதா ரகுநாத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. தனது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மீதா ரகுநாத். ஆனால் மணமகன் குறித்த விபரத்தை அவர் வெளியிடவில்லை.
Tags
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!