
ஐ.எம்.டி.பி தரவரிசை பட்டியல் வெளியீடு: விஜய்சேதுபதி, நயன்தாரா, தமன்னா டாப்-10ல் இடம் பிடித்தனர்.
இந்த ஆண்டு இரண்டு வெற்றிப் படங்களில் நடித்த (பதான் மற்றும் ஜவான்), ஷாரூக்கான் முதலிடத்தை பெற்றுள்ளார். ஹாலிவுட் திரில்லர் திரைப்படமான "ஹார்ட் ஆப் ஸ்டோன்" படத்தில் நடித்த ஆலியா பட் 2வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் விஜய், அஜித்தை பின்னுக்கு தள்ளிவிட்டு 10வது இடத்தை பிடித்துள்ளார் விஜய் சேதுபதி, நயன்தாராவுக்கு 5வது இடமும், தமன்னாவுக்கு 6வது இடமும் கிடைத்துள்ளது.
முழு பட்டியல்:
1. ஷாரூக்கான்
2. ஆலியா பட்
3. தீபிகா படுகோன்
4. வாமிக்கா காபி
5. நயன்தாரா
6. தமன்னா பாட்டியா
7. கரீனா கபூர் கான்
8. சோபித்தா துலிப்பாலா
9. அக்ஷய் குமார்
10. விஜய் சேதுபதி
"ஐ.எம்.டி.பி" நிறுவனம் ஒரு வணிக நிறுவனம்; அதன் தர மதிப்பீடுளும் வணிக நோக்கம் கொண்டவை என்ற விமர்சனமும் உண்டு.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!