
எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சாதனையாளர் விருது: எம்.ஜி.ஆர் பல்கலைகழகம் வழங்கியது
ராமநாதபுரத்தை சேர்ந்த எஸ்.ஏ.சந்திரசேகர், சென்னையில் அரசு பணியில் வேலைக்கு சேர்ந்தார். எம்.ஜி.ஆர் நடித்த "எங்க வீட்டு பிள்ளை" படத்தின் மூலம் சவுண்ட் என்ஜினீயரான இவர் பின்னர் டி.என்.பாலுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். 1981ம் ஆண்டு "சட்டம் ஒரு இருட்டரை" படத்தின் மூலம் இயக்குனரானார். அதன்பிறகு 70க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார். பாலிவுட் படங்களும் இயக்கி உள்ளார். பல படங்களில குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். டூரிங் டாக்கீஸ், டிராபிக் ராமசாமி உள்ளிட்ட சில படங்களில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். தற்போது சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். தனது மகன் விஜய்யை தனது தயாரிப்பு படங்களில் நடிக்க வைத்து ஹீரோவாக்கினார். இப்போது அவர் முன்னணி நடிகராக இருக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!