
கேம் சேஞ்சர் - ஷங்கருக்கு நெருக்கடி தரும் ராம் சரண்?
தீபாவளியை முன்னிட்டு இப்படத்தின் முதல் சிங்கிளான "ஜரகண்டி ஜரகண்டி" பாடலை வெளியிடுவதாக இருந்தார்கள். கடைசி நேரத்தில் அதையும் ரத்து செய்துவிட்டார்கள். படமும் இழுத்துக் கொண்டே போவதால் ராம் சரணும் கடுப்பில் இருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால், இயக்குனர் ஷங்கருக்கு அவர் நெருக்கடியைக் கொடுத்து படத்தை சீக்கிரம் முடிக்கச் சொன்னதாகச் சொல்கிறார்கள்.
ராம் சரண் அவருடைய அடுத்த படத்தை விரைவில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளாராம். புச்சிபாபு சனா இயக்க உள்ள அப்படம் ராம் சரணின் 16வது படம். அதற்காகத்தான் "கேம் சேஞ்சர்" படத்தை சீக்கிரம் முடித்தாக வேண்டும் என தயாரிப்பாளரிடமும் சொல்லியிருக்கிறார் எனத் தகவல்.
"கேம் சேஞ்சர்" படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு நாளை முதல் மைசூரில் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!