
துருவ நட்சத்திரம் வெளிநாடுகளில் முன்பதிவு ஆரம்பம்
தமிழக வெளியீட்டு வியாபாரம் இன்னும் முடிவடையாததால் இங்கு முன்பதிவு ஆரம்பமாகவில்லை என்று சொல்லப்படுகிறது. படம் வெளியாக ஓரிரு நாட்களே உள்ள நிலையில் இந்த இழுபறி நீடித்து வருகிறது.
இப்படத்தை வைத்து கவுதம் மேனன் ஒரு பெரும் தொகையை கடனாக வாங்கி அதை அடைக்க வேண்டுமாம். படத்தின் வியாபாரம் முடிவடைந்து அதற்கான தொகை கைக்கு வந்தால் மட்டுமே அவரால் கடனை அடைக்க முடியும் என்கிறார்கள்.
இந்த வாரம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள படங்களில் இந்தப் படம்தான் பெரிய படம். ஏற்கெனவே மழையால் கடந்த சில நாட்களாக பல ஊர்களில் பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்படும் நிலை உள்ளது. இந்தப் படம் வரவில்லை என்றால் தியேட்டர்காரர்களுக்கும் பாதிப்புதான், சந்தானத்தின் "80ஸ் பில்டப்" படத்தை மட்டுமே வைத்து ஓட்ட வேண்டும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!