
குற்றப் பரம்பரை வெப் சீரிஸ் எடுக்கவும் சீரியஸ் ஆக வரும் சிக்கல்கள்
வேல ராமமூர்த்தி எழுதிய இந்த நாவலை மையமாக வைத்து இயக்குனர் பாலா திரைப்படமாக்க முயன்றார். இயக்குனரும், கதாசிரியருமான ரத்னகுமார் சேகரித்து வைத்த தரவுகளின் அடிப்படையில் இயக்குனர் பாரதிராஜாவும் இதைப் படமாக்க பிரம்மாண்ட பூஜை எல்லாம் நடத்தினார். அந்த சமயத்தில் பாலாவுக்கும், பாரதிராஜாவுக்கும் மோதல் எழுந்தது. ஏட்டிக்குப் போட்டியாக பத்திரிகையாளர் சந்திப்புகளை எல்லாம் நடத்தினார்கள்.
தற்போது இயக்குனரும், நடிகருமான சசிகுமார் இந்த "குற்றப்பரம்பரை"யை வெப் சீரிஸ் ஆக உருவாக்க முயற்சித்து வருகிறார். பாரதிராஜாவிடம் பேசி அனுமதியும் வாங்கிவிட்டாராம். ஆனால், ரத்னகுமார் அதற்கு சம்மதிக்கவில்லை என்கிறார்கள். நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடரும் எண்ணத்தில் இருக்கிறாராம். அவரையும் எப்படியாவது சமாதானம் செய்த பின் வெப் சீரிஸை ஆரம்பிக்கலாம் என இப்போது கிடப்பில் போட்டுவிட்டார்களாம்.
ஒரு கதையை படமாக்குவதற்குள் எத்தனை சீரியஸ் சிக்கல்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!