லியோ - ஓடிடி தேதி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நவ 20, 2023
Advertisement
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள "லியோ" படம் கடந்த மாதம் 19ம் தேதி வெளியானது. 540 கோடி வசூல் வரையில் படத்தின் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதன்பின் வசூல் கணக்கு என்னவென்பதை சொல்லவேயில்லை.
படம் வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி தளத்தில் வெளியாவது வழக்கம்தான். ஆனால், இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் நான்கு வாரங்கள் பிளஸ் நான்கு நாட்கள் கழித்து ஓடிடி தளத்தில் வெளியிடுகிறார்கள்.
படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்றுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம், “இந்தியாவில் நவம்பர் 24ம் தேதியும், உலக அளவில் நவம்பர் 28ம் தேதியும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும்,” என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தியேட்டர்களில் வெளியான போது பெற்ற வரவேற்பைப் போலவே ஓடிடி தளத்திலும் இப்படம் அதிக வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!