
முதல் மரியாதை : ரீமேக் செய்ய விரும்பும் கவுதம் மேனன்
"துருவ நட்சத்திரம்" படம் பற்றிய சந்திப்பின் போது "எந்த பழைய படத்தை மீண்டும் செய்ய ஆசை" என்ற கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கையில் "முதல் மரியாதை" படத்தை ரீமேக் செய்ய ஆசை" என்று பதிலளித்தார். சிவாஜி கணேசன் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வேண்டும் என்ற கேள்விக்கு "கமல்ஹாசன்" என சட்டென்று கூறினார். ராதா கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பீர்கள் என்ற கேள்விக்கு பிறகு சொல்கிறேன் என்றவர், கடைசி வரை சொல்லவேயில்லை.
கிராமத்துக் கதைகளை படமாக்குவதில்லையே என்ற மற்றொரு கேள்விக்கு, “வெந்து தணிந்தது காடு” படத்தில் கூட ஆரம்பத்தில் சில கிராமத்துக் காட்சிகள் இருக்கும். ஆனால், பலரும் ஏன் அப்படியெல்லாம் எடுக்கிறீர்கள் என்று கேட்டனர். அந்தக் காட்சிகள் படத்திற்கு கொஞ்சம் மைனஸ் ஆக அமைந்துவிட்டதோ என்று கூட யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். நான் "அர்பன்" டைப் படங்களை எடுக்கவே பலரும் விரும்புகிறார்கள் போலிருக்கிறது. எனக்கும் ஒரு கிராமத்துப் படத்தை எடுக்க ஆசைதான்,” என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!