
மாதவன் - கங்கனா படத்தின் படப்பிடிப்பில் ரஜினி
இந்த நிலையில் தற்போது மாதவனை நாயகனாக வைத்து ஏ.எல்.விஜய் இயக்கும் புதிய படத்திலும் இணைந்துள்ளார் கங்கனா. தலைவி படத்திற்கு பின் மீண்டும் விஜய் இயக்கத்தில் கங்கனா நடிக்கிறார். அதோடு 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மாதவன் உடன் நடிக்கிறார். சைக்காலஜி கலந்த திரில்லர் படமாக உருவாகிறது. ஜி.வி .பிரகாஷ் இசையமைக்கிறார்.
சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் திடீரென விசிட் கொடுத்துள்ளார். அந்த போட்டோக்களை பகிர்ந்து, ‛‛என்ன ஒரு அற்புதமான தருணம். எங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸாக வந்து ஆச்சர்யப்படுத்தினார் ரஜினி"" என நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார் கங்கனா.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!