
6 வருடங்களுக்கு பிறகு நடிக்க வந்த அரிஷ் குமார்
அரிஷ் கூறியிருப்பதாவது : ‛‛ "லேபிள்" என்றால் ஒரு அடையாளம். ஒரு பிராண்ட். அந்த வகையில் இந்த லேபிள் மூலம் நான் ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்வேன். கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க துவங்கியிருக்கிறேன். இந்த இடைவெளி கூட எனது தவறினால் நிகழ்ந்தது தான். நாம் தட்டும் எல்லா கதவும் நமக்காக திறக்கப்படும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஏதோ ஒரு கதவு திறக்கும். தட்டுவதை மட்டும் நாம் நிறுத்தக்கூடாது என்பதை புரிந்து கொண்டேன்.
லேபிள் வெப் சீரிஸில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கண்ணதாசன் படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் என வந்து கதை சொன்னார்கள். எனக்கே அது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இரண்டிற்குமே நடிப்பிலும் தோற்றத்திலும் வித்தியாசம் காட்டி இருக்கிறேன். பொதுவாகவே ஒரு நடிகருக்கு போலீஸ் படங்கள் அவரை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் என்பார்கள். நாமும் நிறைய பார்த்திருக்கிறோம். என்னுடைய திரையுலக பயணத்திலும் அந்த மேஜிக் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்.
கண்ணதாசன் படத்தை தொடர்ந்து இன்னொரு வெப் சீரிஸிலும் நடிக்கிறேன். அதற்கான படப்பிடிப்பும் துவங்கி விட்டது. இனி கதைக்காக காத்திருப்பது, நல்ல படத்திற்காக காத்திருப்பது என்பதைத் தாண்டி கிடைக்கிற வாய்ப்பில் எப்படி கோல் அடிப்பது என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். தொலைத்த இடத்தில் தான் தேட முடியும் என்பார்கள். இப்போது நானே என்னைத் தேடிக் கண்டுபிடித்து இருக்கிறேன்,"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!