
‛மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்தை துறந்தது ஏன் - மனம் திறந்த லாரன்ஸ்
இதுபற்றி ராகவா லாரன்ஸ் சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியதாவது, “மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் மக்கள் சூப்பர் ஸ்டார் என்கிற பட்டம் இடம் பெற்றது. ஆனால் அதற்கு ரஜினி ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள் . அந்த சமயத்தில் எனக்கு அவ்வளவு பக்குவம் இல்லை. பின்னர் இயக்குனர் சாய் ரமணியை அழைத்து அதை நீங்கள் விருப்பப்பட்டு போட்ட மாதிரி சொல்லிவிடுங்கள். ரொம்ப தவறாக பேசுகிறார்கள் என கூறினேன். வீட்டில் என் அம்மா கூட என்னிடம் உன்னுடைய தலைவர் பெயரைத்தானே சேர்த்துக் கொண்டாய்? இதில் என்ன தவறு என என்னிடம் கேட்டார். அதற்கு நான் இனி இந்த பட்டம் வேண்டாம் மிக தவறாக பேசுகிறார்கள் என கூறினேன்" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!