
லவ் தாண்டி அடுத்த லெவல் போகும் ஹரிஷ் கல்யாண்
படம் பற்றி இயக்குனர் பேசும்போது, ‛‛கொரோனா காலக்கட்டத்தில் எழுதிய கதை. கார் வைத்திருக்கும் பலரும் சந்திக்கும் பிரச்னை தான் இந்தபடம். சில உண்மை சம்பவங்களும் உள்ளன. மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள், காரை காரா பாருங்க உயிரா பார்க்காதீங்க என்று சொல்லும் கதை,"" என்கிறார்
ஹரிஷ் பேசும்போது, ‛‛நிறைய காதல் படங்களில் நடித்து விட்டேன். இந்த படத்தில் 30 வயது இளைஞனாக, ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் குடும்ப தலைவனாக வருகிறேன். லப்பர் பந்து, டீசல் என்று ஆக்ஷன் கதைகளில் என்னை அடுத்தடுத்து பார்க்கலாம். ஒரேமாதிரி காதல் கதைகள் தவிர்த்து வேற வேற கதைகளுடன் வருகிறேன்"" என்கிறார்
ஹரிஷ் ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். கர்ப்பிணியாக படத்தில் அவர் வருகிறார். பட தலைப்பு போலவே பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்த இந்துஜா பார்க்கிங்கில் அவரது காரை நிறுத்த அவதிப்பட்டார். இந்த படத்தில் எம்எஸ் பாஸ்கர், ஹரிஷ் கூட்டணி சிறப்பாக வந்துள்ளதாக பட குழுவினர் தெரிவித்தனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!