
தமிழ் வெப் தொடரில் 11 பாடல்கள்
இந்த தொடருக்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார், பாடல்களை மதுரை சியான் சாஹீர், செந்தில் குமார், ஐக்கி பெர்ரி, சினேகன், குரு அய்யாதுரை மற்றும் ஷில்பா நடராஜன் எழுதியுள்ளனர். மகாளிமுத்து, சிந்துரி விஷால், மதிச்சியம் பாலா, குரு அய்யாதுரை, சியான், செந்தில் குமார், ஐக்கி பெர்ரி, கிரிஷ் கோபாலகிருஷ்ணன், டி.பிரதிமா பிள்ளை, ஷில்பா நடராஜன் ஆகியோர் பாடியுள்ளனர். 11 பாடல்களை கொண்ட ஆடியோ ஆல்பத்தை யூடியூபில் வெளியிட்டுள்ளனர்.
இந்த தொடரை ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில், ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார். மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். ஆர்யா, திவ்யா பிள்ளை, ஆழியா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மாயன், பி.என்.சன்னி, முத்துக்குமார், கே.கலைராணி, ஜான் கொக்கைன், பூஜா, வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் நடித்துள்ளனர். வருகிற 24ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!