
தமிழுக்கு வருகிறார் மலையாள நடிகை மமிதா
வளர்ந்து வரும் மலையாள நடிகை மமிதா பைஜு. சர்பபூரி பலாக்காரன் என்ற படத்தில் அறிமுகமான இவர் டக்னி, வர்த்தன், ஆபரேஷன் ஜீவா, கோகோ, சூப்பர் சரண்யா, பிரணய விலாசம், ராமச்சந்திரா போஸ் அண்ட் கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் "ரெபல்" என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.
இதில் அவர் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடிக்கிறார். படத்தை அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார் அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் தயாராகிறது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!