
தமிழுக்கு வரும் மாளவிகா மனோஜ்
கேரளா, தமிழ்நாடு எல்லையில் இருக்கும் ஒரு கல்லூரியில் நடக்கும் காதல் கதையாக உருவாகிறது. இதில் ராமநாதபுரத்தை சேர்ந்த தமிழ் இளைஞனாக ரியோ ராஜும், கேரளாவை சேர்ந்த பெண்ணாக மாளவிகா மனோஜும் நடித்துள்ளனர். இருவர் காதலுக்கு வரும் பிரச்னைகளும், தீர்வுகளும் தான் படத்தின் கதை.
விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து, மாத்யூ அருள் நந்து தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் அன்புதாசன், ஏகன், பவ்யா திரிக்கா உள்பட பலர் நடிக்கிறார்கள். ஹரிஹரன் ராம் இயக்கி உள்ளார். ராகுல் கே விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசை அமைத்துள்ளார். இவரது இசையில் வைசாக் பாடல் வரிகளில் உருவாகியுள்ள "ஒரே கனா" பாடலில் யுவன் ஷங்கர் ராஜா நடித்துள்ளார். வருகிற 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!