
கணவன், மனைவி ஜோடியாக நடிக்கும் புளூ ஸ்டார்
இந்த படம் வட சென்னை இளைஞர்களிடையே நடக்கும் லோக்கல் கிரிக்கெட் போட்டியை மையமாக கொண்டு தயாராகி வருகிறது. கிரிக்கெட் போட்டி என்கிற பெயரில் இளைஞர்களை மோதவிட்டு அதில் அரசியல்வாதிகளும், உள்ளூர் பெரிய மனிதர்களும் எப்படி குளிர் காய்கிறார்கள் என்பதை பற்றிய படம். "புளூ ஸ்டார்" என்பது அசோக் செல்வனின் கிரிக்கெட் அணியின் பெயர்.
அசோக் செல்வன் லேத் பட்டறையில் வேலை செய்பவராகவும், கீர்த்தி பாண்டியன் பள்ளி மாணவியாகவும் நடித்துள்ளனர். இருவரும் காதலர்களாக நடித்துள்ளனர். இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு நிஜ கணவன் மனைவி ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!