
கேப்டன் மில்லர் தனுஷ் ரசிகர்களுக்கு புதிய ட்ரீட்! - இயக்குனர் அருண் மாதேஸ்வரன்
டிசம்பர் 15ம் தேதி திரைக்கு வரவுள்ள கேப்டன் மில்லர் படம் குறித்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறுகையில், இப்படம் திரைக்கு வருவதற்கு 38 நாட்கள் இருப்பதால் விரைவில் புரமோஷன் பணிகளை தொடங்கவிருக்கிறோம். சமீப காலமாக படங்களின் ஆடியோ விழாவை பிரமாண்டமாக நடத்துவது ஒரு ட்ரெண்ட் ஆகிவிட்டது. அதனால் இப்படத்தின் ஆடியோ விழாவையும் பிரமாண்டமாக நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். அதோடு இதுவரை தனுஷ் நடித்த படங்களில் இது ஒரு தனித்துவமான படமாக இருக்கும். தனுஷ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் ஆகவும் இந்த படம் இருக்கும். பிரிட்டிஷ்காரர்கள் இந்தியர்கள் மீது படையெடுத்த அந்த அடிமைத்தனத்தை மட்டுமின்றி இன்றைய சமூகத்தில் இருக்கும் அடிமைத்தனம், ஆதிக்க வர்க்கத்தின் செயல்களையும் பேசக்கூடியதாக இந்த கேப்டன் மில்லர் படம் இருக்கும் என்கிறார் அருண் மாதேஸ்வரன்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!