
அனுஷ்காவின் 50வது படமாக பாகமதி 2?
2017ல் வெளிவந்த "பாகுபலி 2" படத்திற்குப் பிறகு கடந்த 6 ஆண்டுகளில் “பாகமதி, சைலன்ஸ், மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி" ஆகிய 3 படங்களில் மட்டுமே நடித்துள்ளார் அனுஷ்கா. தற்போது "கதனர்" என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார்.
அதற்கடுத்து அனுஷ்கா நடிக்க உள்ள படம் அவரது 50வது படம். இதனிடையே, சிரஞ்சீவியின் 156வது படத்தில் அனுஷ்காவை நடிக்கக் கேட்டு அவர் இன்னும் சம்மதிக்கவில்லை என்கிறார்கள். அவர் நடிக்க மறுக்கவும் வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவரது 50வது படமாக "பாகமதி" படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார்களாம். அப்படத்தில் நடிக்கவே அனுஷ்கா அதிக ஆர்வத்துடன் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
43வது பிறந்தநாளைக் கொண்டாடும் அனுஷ்கா இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!