
நடிகைகளுக்கு சமூக வலைத்தளம் முக்கியம்: அனுகீர்த்தி வாஸ்
இதுகுறித்து அவர் கூறும்போது, ‛‛5 ஆண்டுளுக்கு முன்பு வரை எனக்கு சோஷியல் மீடியா பற்றி எதுவும் தெரியாது. ஆனால் இப்போதுதான் அதன் தேவையை உணர்ந்திருக்கிறேன். நடிக்க வாய்ப்புகள் வரும்போது உங்கள் இன்ஸ்டாம்கிராம் ஐடி அனுப்புங்கள் என்றுதான் கேட்கிறார்கள். அதை பார்த்தே முடிவு செய்கிறார்கள். எனவே நான் செய்யும் விஷயங்களை அதில் பதிவேற்ற வேண்டிய தேவை இருக்கிறது. உண்மையில் சோஷியல் மீடியா வழியாக ரீச் நிறைய கிடைக்கிறது. எப்படியிருப்பினும் சமூக வலைதளங்கள்தான் சமூகத்தைப் பார்ப்பதற்கான இன்னொரு கண்ணாடி. எனவே என்னை போன்ற நடிகைகளுக்கு அது கட்டாய தேவையாகிறது,"" என்கிறார் அனு.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!