
போலீஸ் அதிகாரியாக நடிக்கும் காஜல் அகர்வால்!
இந்த நிலையில் தற்போது தெலுங்கில் சத்தியபாமா என்ற ஒரு படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். போலீஸ் அதிகாரி வேடத்தில் அவர் நடிக்கும் இந்த படத்தை சுமன் சிக்கலா என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதன் டீசர் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு போலீஸ் உடையில் காஜல் அகர்வால் கம்பீரமாக தோன்றும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்கள். இப்படம் தவிர உமா என்ற ஒரு ஹிந்தி படத்திலும் அவர் கதையின் நாயகியாக தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!