
மும்பையில் அபார்ட்மென்ட் வாங்கிய அக்ஷரா ஹாசன்
ஸ்ருதிஹாசன் அங்கு ஒரு அபார்ட்மென்ட்டில் அவரது காதலருடன் வசித்து வருவதாக ஒரு தகவல். 37 வயதைக் கடந்தாலும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அவரது தங்கை அக்ஷராவும் 30 வயதைக் கடந்தவர். அக்ஷ்ரா அப்பாவின் படங்களில் உதவி இயக்குனராகவும் வேலை பார்த்தவர். தமிழில் "விவேகம், கடாரம் கொண்டான்" ஆகிய படங்களில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனியுடன் அவர் நடித்து முடித்துள்ள "அக்னி சிறகுகள்" படம் இன்னும் வெளிவராமல் இருக்கிறது.
அக்ஷரா தற்போது மும்பை புறநகர் பகுதியான கர் என்ற இடத்தில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள அபார்ட்மென்ட் ஒன்றை வாங்கியுள்ளாராம். 3 கார் பார்க்கிங் கொண்ட அந்த வீட்டிற்கு பதிவுத் தொகையாக மட்டும் ஒரு கோடி ரூபாய் செலுத்தியுள்ளார் எனத் தகவல்.
ஸ்ருதியும், அக்ஷராவும் அவ்வப்போது அவரது அப்பா கமல்ஹாசனை சென்னைக்கு வந்து சந்தித்துவிட்டு மீண்டும் மும்பை சென்றுவிடுவது வழக்கம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!