
யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் பாடிய பாடல் வெளியானது
கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வெளிவந்த "ஜிகிர் தண்டா" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது "ஜிகிர் தண்டா டபுள் எக்ஸ்" என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ். இதில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற நவம்பர் 10ந் தேதி திரைக்கு வருகிறது. இதனால் இப்படத்திலிருந்து பாடல்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையில் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்காக "தீக்குச்சி" எனும் பாடலை பாடியுள்ளார். யுவனுடன் சந்தோஷ் நாராயணனும் இணைந்து பாடி உள்ளார். தற்போது இப்பாடல் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!