
இரண்டு வாரங்களைக் கடந்த லியோ : அடுத்த வாரம் வரை தியேட்டர்களில்…
இந்த வாரத்தில் படத்தைப் பார்க்கத் தியேட்டர்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை நாள் என்றாலும் முன்பதிவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பல தியேட்டர்களில் ஒரு வரிசை கூட முன்பதிவு ஆகாமல்தான் உள்ளது.
அடுத்த வெள்ளிக்கிழமை தீபாவளி படங்கள் வெளிவரும் வரை தியேட்டர்காரர்களுக்கும் வேறு படங்கள் இல்லை. எனவே, இரண்டு வாரத்தைக் கடந்தாலும் வேறு வழியில்லாமல் "லியோ" படத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் என தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
12 நாட்களில் இப்படம் 540 கோடி வசூலைக் கடந்ததாக நான்கு நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்கள். தற்போது படம் 550 கோடி வசூலைக் கடந்திருக்கலாம் என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "ஜெயிலர்" படம் 600 கோடி வசூலைக் கடந்தது போல "லியோ" படம் கடக்க வாய்ப்பில்லை என்றே தெரிவிக்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!