
தங்கலான் படத்தில் விக்ரமிற்கு வசனங்கள் இல்லையா ?
இப்படத்தில் விக்ரம் பேசுவதற்கு வசனங்களே இல்லை என சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வந்தது. இந்நிலையில் அது குறித்து விக்ரம் ரசிகர் மன்றத் தலைவர் சூரியநாராயணன் ஒரு விளக்கமளித்துள்ளார்.
அதில், “தங்கலான்" படத்தில் விக்ரம் சாருக்கு வசனங்கள் இல்லை என சமூக வலைத்தளங்களில் ஒரு குழப்பம் போய்க் கொண்டிருக்கிறது. ஒரு நிருபர் அவரிடம் படத்தில் உங்களுக்கு வசனங்கள் இல்லையா என்று கேட்டார், அதற்கு விக்ரம், “டீசரில் எனக்கு டயலாக் இல்லை” என ஜோக்காக சொன்னார். "தங்கலான்" படம் நேரடியாக ஒலிப்பதிவு செய்யப்பட்ட படம். படத்தில் அவருக்கு நிச்சயம் டயலாக்குகள் உண்டு,” என்று தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!