
கார்த்தி 26 படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடிய நலன் குமாரசாமி
இந்த நிலையில் தற்போது நடிகர் கார்த்தியின் 26-வது படத்தை இயக்கி வருகிறார் நலன் குமாரசாமி. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நலன் குமாரசாமியின் பிறந்தநாள் என்பதால் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி அவரது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடியுள்ளனர் கார்த்தி மற்றும் படக்குழுவினர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன. இதுநாள் வரை இப்படி ஒரு கூட்டணியில் படம் தயாராகி வருவதாக சொல்லப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து முதலில் வெளியாகி இருக்கும் புகைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!