
இரண்டல்ல.. மூன்று படம் வந்தாலும் ஜப்பான் தாக்கு பிடிக்கும் : தயாரிப்பாளர் நம்பிக்கை
இது குறித்த தகவலை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்ட படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவிடம், தீபாவளிக்கு கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா டபுளக்ஸ் திரைப்படமும் வெளியாகிறது. இதனால் ஜப்பான் படத்துக்கு போதிய அளவு திரையரங்குகள் கிடைக்குமா, வசூல் பாதிக்காதா என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, “தீபாவளி ரிலீஸில் மூன்றாவதாக ஒரு படம் வெளியானாலும் கூட எங்களது படத்திற்கு என இருக்கும் எதிர்பார்ப்புக்கு ஏற்ற திரையரங்குகளும் காட்சிகளும் கிடைக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். கேஜிஎப், பீஸ்ட் படங்கள் ஒன்றாக வெளியான சமயத்தில் தினசரி ஆறு காட்சிகள் ஓடும் அளவிற்கு இங்கே ஒரு சிஸ்டம் கொண்டு வந்திருந்தார்கள். ஆனால் இன்று நிலைமை மாறி உள்ளது. எங்களது படத்திற்கு எத்தனை திரையரங்குகள் கிடைக்கின்றன என்பதை விட எத்தனை பேர் இந்த படத்தை பார்க்க விரும்புகிறார்கள் என்பதில் தான் படத்தின் வெற்றியே இருக்கிறது” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!