
லியோ - தியேட்டர்கள் பஞ்சாயத்து : நாளை பேச்சுவார்த்தை
80 சதவீதம், 20 சதவீதம் என டிஸ்ட்ரிபியூஷன் அடிப்படையில் படத்தை வெளியிட வினியோகஸ்தர்கள் தரப்பில் நிர்பந்திக்கப்பட்டதே அதற்குக் காரணமாக இருந்தது. சிலர் மட்டுமே அப்படியெல்லாம் படத்தை வெளியிட முடியாது என நிராகரித்துவிட்டனர். ஆனால், பலரும் அப்படியான சதவீதத்திற்கு உட்பட்டு படத்தை வெளியிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். இருப்பினும் படம் வெளியான பின் இதற்குரிய தீர்வை எட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சிலர் படத்தை வெளியிட்டார்கள் என்கிறார்கள்.
எனவே, இது குறித்து மேலும் விவாதிக்க நாளை(அக்., 26) பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 60 சதவீதம் 40 சதவீதம் என்ற நிலையில்தான் படத்தை வெளியிடுவோம் என தியேட்டர்காரர்கள் உறுதியாக இருக்கிறார்களாம். இந்த விவகாரம் குறித்து நாளை முடிவு எட்டப்படவில்லை என்றால் "லியோ" பங்கு பிரிப்பில் சிக்கல் எழ வாய்ப்புள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!