
இருமொழி படத்தில் கதை நாயகனாக சமுத்திரகனி
ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் நிறுவனத்தின் சார்பில் பிரபாகர் ஆரிபா , பிருத்வி போலவரபு தயாரிக்க, பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி இயக்குகிறார். அருண் சிருவேலு இசை அமைக்கிறார், துர்கா பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. விமானம் படத்தின் இயக்குனர் சிவபிரசாத் கதை எழுதியுள்ளார்.
படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடந்தது. பின்னர் படம் குறித்து இயக்குனர் தன்ராஜ் கொரனானி கூறும்போது “அப்பா மகன் என்ற உணர்வுபூர்வமான கோணத்தில் உருவாகும் இத்திரைப்படம், இதுவரை யாரும் சொல்லப்படாத தனித்துவமான கருத்தை கொண்டிருக்கும் கதையாக உருவாகிறது. நவம்பர் 9ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது. ஐதராபாத், சென்னை, மதுரை தேனி, திண்டுக்கல் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது” என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!