
ஜெயிலர் Vs லியோ : ஆரம்பமான வசூல் சண்டை
இதனிடையே, விஜய் நடித்து கடந்த வாரம் வெளியான "லியோ" படத்தின் வசூல் 400 கோடி என "காம்ஸ்கோர்" இணையதளம் செய்தியை வெளியிட்டது. ஆனால், அது பொய்யான வசூல் என ரஜினிகாந்த் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். "லியோ ஸ்கேம்" என்று கூட எக்ஸ் தளத்தில் டிரெண்டிங் இருந்து வருகிறது. அந்த 400 கோடி வசூல் என்பதே ஒரு ஊழல் தான் என்பதுதான் அந்த டிரெண்டிங்கின் சாராம்சம்.
இதனிடையே, "ஜெயிலர்" படத்தின் வசூலை "லியோ" முறியடித்துவிடும் என விஜய் ரசிகர்கள் பரப்பி வருகிறார்கள். இன்று வரை விடுமுறை நாள் என்பதால் படத்தின் வசூல் சிறப்பாகவே இருக்கிறது. நாளை முதல் வசூலில் மிகப் பெரும் சரிவு ஏற்படலாம். அதனால், இன்றைக்கோ நாளைக்கோ "லியோ" படத்தின் வசூல் இத்தனை கோடி என தயாரிப்பு நிறுவனம் தரப்பிலோ, அல்லது அவர்கள் சார்பிலோ வசூல் விவரம் வெளியாகலாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!