
லிவிங்ஸ்டனை வீட்டுக்கு அழைத்து உபசரித்த ரஜினி
இந்த நிலையில் ரஜினிகாந்தை அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்துள்ளார் லிவிங்ஸ்டன். பொதுவாக ரஜினிகாந்தின் நட்பு வட்டாரத்தில் உள்ள நடிகர்கள் அல்லது அவரது படங்களின் உடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற நடிகர்கள் மரியாதை நிமித்தமாக அவரிடம் நேரம் கேட்டு அவரது வீட்டிற்கு சென்று சந்திப்பது உண்டு. ஆனால் நடிகர் லிவிங்ஸ்டனை ரஜினியே தனது கடந்த வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்து அவரை வரவேற்று உபசரித்துள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிடா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், “இந்த நாள் என் வாழ்க்கையில் நினைவில் வைத்து பாதுகாக்கும் ஒரு மறக்க முடியாத நாள். ஆம்.. சூப்பர் ஸ்டாரே என் தந்தையை அவரது வீட்டிற்கு அழைத்திருந்தார். அப்பாவுக்கும் சூப்பர் ஸ்டாருக்கும் இருக்கும் நெருக்கம் பற்றி எனக்கு ஏற்கனவே தெரியும். இன்று எனக்கு படப்பிடிப்பு இல்லாமல் இருந்திருந்தால் எப்படியாவது என் தந்தையிடம் கெஞ்சி, நானும் அவரை சந்திக்க வருகிறேன் என கிளம்பி இருப்பேன். ரஜினி சாரின் மீதான அன்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஒரு நாள் விரைவில் அவரை சந்திப்பேன்” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!