
இலங்கை இயக்குனர் இயக்கி, மணிரத்னம் வெளியிடும் படத்திற்கு விருது
இந்நிலையில், தற்போது அவர் எழுதி இயக்கியிருக்கும் புதிய படம் "பேரடைஸ். இந்த படத்தில் மலையாள நடிகர்களான ரோஷன் மேத்தீவ், தர்ஷனா ராஜேந்திரன் நடித்துள்ளனர். ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். நியூட்டன் சினிமா தயாரித்துள்ளது.
போருக்கு பிந்தைய தற்போதைய இலங்கைக்கு சுற்றுலா வரும் ஒரு மலையாள தம்பதிகள் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து இந்த படம் தயாராகியுள்ளது. இந்த படத்தை பார்த்த இயக்குனர் மணிரத்னம் இதனை தனது மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறார். ஏற்கெனவே இந்த படம் தென்கொரியாவின் புகழ்பெற்ற பூஷன் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான கிம் ஜிஜோக் விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!