
விரைவில் சர்தார் 2 : கார்த்தி தகவல்
படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள கார்த்தி, “பிளாக் பஸ்டர் படமான சர்தார்" வெளியாகி ஓர் ஆண்டாகிறது. இந்த மைல்கல்லை எட்டியதற்காக எனது அன்பான ரசிகர்களுக்கு நன்றி. "சர்தார் 2" விரைவில் ஆரம்பமாகும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
கார்த்தி நடித்துள்ள "ஜப்பான்" படம் அடுத்த மாதம் தீபாவளிக்கு வெளியாகிறது. நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். அதற்கடுத்து "சர்தார் 2" படம் ஆரம்பமாகலாம். அதற்குப் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2" படமும் உருவாகலாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!