திருமணத்திற்கு பிறகு தெலுங்கில் பிசியாகும் காஜல் அகர்வால்
Advertisement
Advertisement
திருமணத்திற்கு பிறகு தெலுங்கில் பிசியாகும் காஜல் அகர்வால்
அக் 20, 2023
அ நிறம் | அளவு
Advertisement
திருமணத்திற்கு பிறகு தமிழில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன்-2 படத்தில் நடித்திருக்கிறார் காஜல் அகர்வால். தெலுங்கில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக அவர் நடித்த பகவத் கேசரி என்ற படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. சீனியர் ஹீரோக்களுடன் நடிப்பதற்கு தான் தயாராக இருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ள காஜல் அகர்வால், தமிழில் இந்தியன்-2 என்ற படத்தில் நடித்து முடித்து விட்டேன். அந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். அது தவிர தெலுங்கில் சத்தியபாமா என்ற படத்தில் கதையின் நாயகியாக தற்போது நடித்து வருகிறேன். இன்னும் இரண்டு தெலுங்கு படங்களிலும் கமிட்டாகி உள்ளேன். ஹிந்தியில் உமா என்ற படத்திலும் கதையின் நாயகியாக நடித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!