
கார்த்திகாவுக்கு விரைவில் திருமணம்?
அவருக்கு கார்த்திகா, துளசி என இரு மகள்களும், விக்னேஷ் என்ற ஒரு மகனும் இருக்கிறார். கார்த்திகா 2011ல் வெளிவந்த "கோ" படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் "அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை" படத்திலும் நடித்தார். முதல் படம் பெரிய வெற்றியைப் பெற்ற பின்னும் அடுத்த படங்கள் ஓடாததால் அவரால் இங்கு ஜொலிக்க முடியவில்லை. மணிரத்னம் இயக்கிய "கடல்" படத்தில் இரண்டாவது மகள் துளசி அறிமுகமானார். அவரும் அதன்பின் "யான்" என்ற படத்தில் நடித்ததோடு சரி.
கார்த்திகா அவருடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒரு இளைஞருடன் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கையில் அணிந்திருக்கும் மோதிரம்தான் "போகஸ்" செய்யப்பட்டுள்ளது. அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது குறித்து பதிவிட்டுள்ளார் எனத் தெரிகிறது. விரைவில் அவருடைய திருமண அறிவிப்பு வரலாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!