
விஜய் 68 அப்டேட் விரைவில் ஆரம்பம்
இந்நிலையில் விஜய் 68 படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி, வெங்கட் பிரபு பதிவிட்டிருந்த "லியோ" படத்தின் டுவீட்டை ரீபோஸ்ட் செய்து, “நாம் ஆரம்பிக்க வேண்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
"லியோ" படம் வெளிவரும் வரை விஜய் 68 படத்தின் அப்டேட் எதையும் வெளியிட வேண்டாம் என லியோ படக்குழுவினர் கேட்டுக் கொண்டிருந்தனர். இப்போது படம் வெளியாகிவிட்டதால் அடுத்து விஜய் 68 பற்றி சில அப்டேட்டுகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு பூஜை நடந்து, ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பும் முடிந்துள்ளதால் விஜய் 68 குழுவினர் விரைவில் படத்தில் நடிப்பவர்கள், மற்ற கலைஞர்கள் பற்றிய விவரங்களை வெளியிடலாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!